Thursday, June 30, 2005

மாபெரும் புத்தக தரவுத்தளம் - கூகிள் பிரிண்ட்

கூகிள் மீண்டும் ஒரு சேவையை சத்தமில்லாமல் அறிமுகப்படுத்தியுள்ளது. கூகிள் பிரிண்ட் எனும் இந்த சேவை ஒரு மாபெரும் புத்தக தரவுத்தளம். இதில் வித்தியாசம் என்னவென்றல் நீங்கள் இந்த புத்தகங்களின் பக்கங்களையும் படிக்கலாம். பக்கங்கள் ஒளியுணரப்பட்டு சேமிக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக 'Tamil' என்று நீங்கள் கூகிள் பிரிண்டில் தேடினால் 29,000 முடிவுகள் கிடைக்கின்றன. அவை அனைத்தும் தமிழ் தொடர்பாக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகங்கள். பல புத்தகங்களின் பக்கங்கள் முழுமையாகவும், சிலவற்றில் சில பக்கங்கள் மட்டுமும், சிலவற்றில் அறிமுகப்பகுதி, உள்ளடக்கம் மட்டும் கிடைக்கின்றன.

எல்லா புத்தகங்களுக்கும் யார் பதிப்பாளர், வலையில் எங்கே கிடைக்கும் போன்ற தகவல்களும் கொடுக்கப்படுகிறது.

வெங்கட் தமிழ் புத்தக தரவுத் தளம் அமைக்கும் திட்டம் பற்றி பதிவிட்டிருந்தார். அந்த தரவுத்தளம் அமைக்கப்படும் வரையில் இந்த கூகிள் தரவுத்தளத்திற்கு நாம் தரவுகளை வழங்கலாமே?

கூகிளின் தரவுகள், பதிப்பகங்கள் மற்றும் நூலகங்களில் இருந்து பெறப்படுவதாகத் தெரிகிறது. பதிப்பாளர் பத்ரி, பதிப்பாளர்களொடு தொடர்புடைய ஹரன் பிரசன்னா போன்றோர் கூகிளை இது குறித்து தொடர்பு கொள்ள முயற்சிக்கலாம்.

இதற்கிடையில் நம்முடைய தரவுத்தள முயற்சியும் தொடரப்பட வேண்டும். ஒரு தரவுத்தளம் எந்த தனி நபர் சாராததாகவும், இன்னொன்று கூகிள் போன்ற மாபெரும் வலை நிறுவனத்தின் வீச்சை பயன்படுத்துவதாகவும் இருப்பது நல்லதுதானே..

2 comments:

மஞ்சூர் ராசா said...

அன்பு சுதர்சன்
தகவலுக்கு மிகவும் நன்றி. என் நண்பர் சித்தார்த் கூகிளுக்காக தமிழில் ஏதோ செய்துக்கொண்டிருப்பதாக சொன்னார். அனேகமாக அவர்கள் தமிழிலும் அனைத்தையும் கொண்டுவர முயற்சி செய்கிறாகளோ என நினைக்கிறேன்.

Chandravathanaa said...

தகவலுக்கு நன்றி