Monday, June 16, 2008

உலக சாதனையில் பங்கு கொள்ளுங்கள் !

நாளை (ஜூன் 17, 2008) பயர்பாக்ஸ் தரவிறக்க நாள். உலாவியின் மூன்றாம் பதிப்பின் வெளியீட்டை முன்னிட்டு ஒரே நாளில் அதிகமாக தரவிறக்கப்பட்ட மென்பொருள் என்ற கின்னஸ் சாதனையை உருவாக்க மொசில்லா குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்கள். நாளை ஒன்றிரண்டு பிரதிகளை (வீடு, அலுவலகம்) தரவிறக்கி உலக சாதனை ஜோதியில் ஐக்கியமாகுங்கள். இங்கே சென்று 'தரவிறக்கப் பிரமாணம் ' எடுத்துக் கொள்ளலாம். திறமுலத்திற்கான நம்மாலான சிறு ஆதரவை நாளை தெரிவிப்போம்.



,
,

Saturday, June 14, 2008

கூகிளும் யாஹுவும் கூட்டு.


மைக்ரோசாஃப்டிடம் இருந்து தப்பித்த யாஹு கூகிளிடம் அடைக்கலம் சேர்ந்துவிட்டது.10 வருட ஒப்பந்தம். ஏற்க்கனவே யாஹு ரொம்ப நிறைய இழந்துவிட்டது. கொஞ்சமே கொஞ்சம் இருந்த மரியாதையும் இப்போ காலி (!).

யாஹுவின் ஓப்பன் சோர்ஸ் டெவ் குரு ஜெரிமி கிளம்புகிறார். டேட்டா குருவும் கிளம்பிவிட்டார்.ஷேர் நாளுக்கு நாள் இறங்கிகொண்டே இருக்கிறது.

புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதை இங்கு அருமையாக பொருந்தும். யாஹு தன்னுடைய பலம் என்ன என்று உணராமலே இருந்தது போல எனக்கு தோண்றுகிரது. இன்னமும் யாஹு வெப் ப்ராபர்டி அருமையான ஒன்று.தேடல் தொழிலை என்றும் யாஹு சரியாக செய்தது கிடையாது.

இருப்பதை விட்டு பறப்பதுக்கு ஆசைப்பட்டால் இதுவே முடிவு என்பது என் கருத்து.

இனி எங்கே செல்லும் யாஹு? கூகிளின் ஒப்பந்தம் யாஹு தேடல் தொழிலை விற்றால் 200 மில்லியனுக்கு மேல் கேட்கும். மைக்ரொசாஃப்ட் இனி எப்படி இதை எதிர்கொள்ள போகிறது என்பது ஒரு அருமையான சினிமாவாக இருக்கும். வழக்கம் போல ஆண்டி- டிரஸ்ட் கம்ப்ளைண்ட். அதற்கு பின்னர் அதன் வசம் இருக்கும் ஆயுதங்கள் என்ன? இப்பொழுதே காசு கொடுத்து தேட சொல்கிறது.

யாஹுவிடம் காசும் இல்லை. சுதந்திரமும் இல்லை. விசுவாசிகளும் இல்லை.

எங்கே செல்லும் இந்த பாதை?

தெரிந்தவர்கள் சொல்லவும்.