Monday, January 24, 2005

அரசியலில் 'மட' அதிபதிகளா?

திண்ணையில் வெளியான இந்த கட்டுரையை படிக்க நேர்ந்தது. http://www.thinnai.com/pl0113058.html. அப்படியே அதிர்ந்து போய் நின்றுவிட்டேன், இப்படி எல்லாம் கூட மக்கள் சிந்திக்கிறார்களா என்ன! ஜெயேந்திரரை அரசியலுக்கு வரச் சொல்லி அழைப்பு விடுக்கிறராம் இவர், யாரைய்யா இந்த வரதன்?. எப்பொழுது இது போன்ற 'அரிய' கருத்தை வெளியிட நேரம் கிடைக்கும் என்று காத்துக் கிடந்திருக்கிறார் போலும்.

சாதியாதிக்க வெறியும், மத வெறியும் கொண்ட ஒரு மடாதிபதி அரசியல் தலைவரா? இந்திய அரசியலமைப்பின் அடிப்படை விழுமியங்களான சமத்துவமும் மதச்சார்பின்மையும் சுத்தமாக நீர்த்துப் போய் விட்டனவா? ஒரு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஒரு கொலை வழக்கின் குற்றப் பத்திரிக்கையை கோர்ட்டில் சமர்ப்பிக்கும் முன் கொண்டு போய் கோவிலில் சமர்ப்பித்து, வழக்கு கடவுளுக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையே நடப்பதாக கூறுகிறார். பின்னே இவரும், நீதிபதியும், அரசும் எதற்கு? இங்கே ஒருவர் அந்த குற்றம் சாட்டப்பட்டவரிடம் தலைமை பண்புக்கான இலக்கணங்களை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடுத்து அவரை நாடாள அழைக்கிறார். 'நெஞ்சு பொறுக்குதில்லையே...' என்ற மகாகவியின் பாடல் நினைவுக்கு வந்தாலும், இந்த மாந்தர்களின் நிலை அதை விடப் படு மோசமாக கெட்டிருப்பதால் வேறு வார்த்தைகளை தேடிக் கொண்டிருக்கிறேன்...

8 comments:

ROSAVASANTH said...

கவனிக்க வேண்டிய விஷயம் அதுமட்டுமல்ல. அடுத்த இதழில் திருமாவளவனுக்கு அறிவுரையும், மற்ற 'உயர்ஜாதி அரசியல்' குறித்து பேசுவதும், அதில் வெளிபடும் சாமர்தியமும், நுட்பமும்தான். (http://www.thinnai.com/le0120058.html) . சொன்னால் பலருக்கு புரியாது, சிலருக்கு ஸ்டீரியோடைப்பாய் தெரியும். அதெற்கென்ன செய்யமுடியும்.

இதுதானய்யா நியோ பார்பனியம்!

Narain Rajagopalan said...

அதிர்ச்சியெல்லாம் அடையவில்லை நான். இது இன்று நேற்றா நடக்கிறது. சாமர்த்தியமாக, தன் கருத்தை நுழைத்து அரசியலுக்கு அழைப்புவிடுக்கும் இதுப் போன்ற எத்தனையோ பேரை இனையத்தில் பார்க்கலாம். சங்கராச்சாரியின் கைதால் தான் ட்சுனாமி வந்த்து எனச் சொன்னவர்கள் தானே இவர்கள். இவர்களிடத்தில் வேறேன்ன எதிர்பார்க்கமுடியும்.

வசந்தின் கருத்தை நானும் வழிமொழிகிறேன். இது இட்டுக்கட்டிய பார்பனீய பேரினவாதம். இந்தியாவின் பிரதமரும், குடியரசுத் தலைவரும் அவரின் முன்னால், கைக்கட்டி நின்ற கொழுப்பு இப்படியெல்லாம் பேசவைக்கிறது.

சுதர்சன், கவலைபடாதிர்கள். இதற்கெல்லாம், ஆளுபவர்கள் ஏமாறலாம். மக்கள் ஏமாற மாட்டார்கள். ஒண்ணுத்துக்கும் உருப்படியில்லாத ஆட்களை (ரஜினி, டி.என்.சேஷன், வெங்கட்ராமன்) வைத்துக்கொண்டுக் காலம் தள்ளுகிறார்கள். எவ்வளவு நாள் அரங்கேறும் இந்தக்கூத்து என்றும் பார்ப்போம்.

வானம்பாடி said...

நாராய்ண்,

மக்கள் ஏமாற மாட்டார்கள் என்றா சொல்கிறீர்கள்? மக்கள் கோயபல்ஸ் பிரச்சாரத்திற்கு செவி சாய்ப்பார்கள். இல்லையென்றால் ஒரு 19ம் நூற்றாண்டு மடத்தை 25 நூற்றாண்டுகள் பழைமையானது என்று நம்புவார்களா? அல்லது அதன் முந்தைய சுயநலவாதித் தலைவனைத் தான் ஜகத்குரு என்று எற்றுக் கொள்வார்களா?

என்னுடைய முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் நீலன் அவர்கள் ஒரு சுட்டியை அனுப்பி இருந்தார். அதை எழுதிய கடைந்தெடுத்த இனவாத வெறியனுக்கும் இந்த வரதனுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.

ROSAVASANTH said...

// அதை எழுதிய கடைந்தெடுத்த இனவாத வெறியனுக்கும் இந்த வரதனுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை//

வித்தியாசம் இருக்கிறது. அதை சுட்டி காட்டவே இரண்டாவது சுட்டியை அளித்தேன். நீங்கள் சொல்லும் அந்த கடைந்தெடுத்த வெறியன் வெளிப்படையானவன். இது போன்ற பிலிம் எல்லாம் காட்டமாட்டான்.

Narain Rajagopalan said...

சுதர்சன், உங்களின் கருத்துக்கு பின்னூட்டம் இட்டபின், பெரியார் பதிப்பகத்தில் வாங்கிய சங்கராச்சாரி யார்? என்ற புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தேன். ஏற்கனவேப் படித்திருந்தாலும், அதில் உள்ள சில விஷயங்கள், என் கேள்விகளை அதிகமாக்குகின்றன. என் வலைப்பூவில் ஒரு பதிவாய் இதனை போடுகிறேன்.

ஆயினும், 'An Encyclopaedian survey of Hinduism" என்ற நூலில் வரும் சிலக் குறிப்புகள், ஆதி சங்கரர் மற்றும் சங்கர மடத்தின் நிலைமையைத் தோலுரித்துக் காட்டுகின்றன. இந்தக் குறிப்புகளும், அந்தப் புத்தகத்திலிருந்து எடுத்தவையே.அதிலிருந்து,

"Sankara was Extremely Crossed conscious a victim of his times, was uable to rise above many of the superstitious beliefs of his age"

"Sankara had no great liberality, basides he used to back great pride in his Brahminism" - சுவாமி விவேகானந்தர்.

அதுமட்டுமின்றி, சங்கரருடைய தத்துவங்கள் என்று சொல்வதேகூட, ஒரு பக்கம் புத்தருடைய கொள்கைளிலேயே இருந்து எடுத்திருக்கிறார்கள்; இன்னொரு பக்கம் இசுலாமியக் கருத்துக்களிலும் ஒரு சிலவற்றைக் காப்பியடித்துச் சொல்லி இருக்கிறார்கள் என்பதையும் இங்கே சொல்கிறார்கள்.

மேலும், விவேகானந்தரே வேறு ஒரு சந்தர்ப்பத்தில் "Hinduisum could hardly expect to find a messiah in Sankara" எனச் சொல்லியிருக்கிறார்.

அதனால், எல்லாக் கட்சிக் கூடாரங்களைப் போலவேத் தான் சங்கரமடமும். ஆதி சங்கரரின் கூற்றுக்களையேப் பொய் என நிருபணமாகும் போது, அவரின் வாரிசுகளை எந்த இடத்தில் வைப்பது என்பதை நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள்.

அந்த மடம் ஒரு சனாதனத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஒரு கேவலமான, பிற்போக்குத்தனத்தின் மொத்தக் குத்தகை. இல்லையென்றால், பெண்கள் வேலைக்குப் போனால், கற்பிழந்துவிடுவார்கள் போன்ற மிகவும் கீழ்த்தரமான "அருள் மொழிகளை" உலகுக்கு அளிப்பார்களா.

ஆக இந்த "அள்ளக்கைகளை" குற்றம் சொல்லுவதில் எவ்விதமான பயனுமில்லை. நாம் இப்போது எதிர்க்கவேண்டியது, மொத்த சங்கரமடத்தையேயன்றி, அம்புகளை அல்ல.

Narain Rajagopalan said...

Sudarshan, i am having few problems in replying, i am not sure my post has received or not, i am just putting the same in my blog

வானம்பாடி said...

நரேன், நீங்கள் சொல்வதை நான் முற்றிலும் ஆமோதிக்கிறேன். //நாம் இப்போது எதிர்க்கவேண்டியது, மொத்த சங்கரமடத்தையேயன்றி, அம்புகளை அல்ல//
என்னுடைய முதல் வலைப்பதிவிலிருந்து நான் இதையே தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். சங்கர மடம் என்பதே ஒரு பித்தலாட்டம், பின்னே அதன் மடாதிபதிகள் மட்டும் என்ன சத்திய சீலர்களாகவா இருக்கப் போகிறார்கள்?

aathirai said...

sila vaarangal munbu varadhan avarkal jeyendrarai yesunadharodu oppitu ezhudhinaar. thanga kireedam anindha yesunadhar!!

thiru varadhan avarkalin katturaikal thinnaiyil nakaiccuvai illaatha kuraiyai theerthu vaikkirathu. idhaiyellam seriousaaka eduthu kolla vendaam.