Thursday, March 31, 2005

யாராகவும் ... நீங்கள்

நம்மில் பலரும் சந்திக்கும் ஒரு ப்ரச்னை குப்பை மின்னஞ்சல்கள். பல இடங்களில் நம்முடைய மின்னஞ்சல் முகவரியை நாமெ கொடுத்து மாட்டிக் கொள்கிறோம். பெரும்பாலும,் இலவசமாக நாம் இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்வதற்கு கொடுக்கும் விலை இது. மெய்லினேட்டர் (Mailinator) வழங்கி வரும் சேவை இதுபோன்ற தொல்லைகளைத தவிர்க்க உதவும். உன் மின்னஞ்சல் முகவரியை கொடுத்தால்தான் ஆச்சு என்று அடம் பிடிக்கும் தளங்களுக்கு 'xyz@mailinator.com' என்று ஏதோ ஒரு முகவரியை கொடுக்கலாம். அந்த 'xyz' என்பதை 'bush', 'dog', 'down' என்று என்ன வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். மெய்லினேட்டர் தளம், ...@mailinator.com் என்று வரும் எந்த ஒரு முகவரிக்கும் உடனடியாக ஒரு அஞ்சல் பெட்டியை உருவாக்கி வைத்து விடும்.
முகவரியைக் கேட்ட தளம் அதை சரி பார்க்கும்போது அந்த முகவரி இருக்கும், அந்த முகவரிக்கு அனுப்பப்படும் அஞ்சல்களும் அந்த அஞ்சல் பெட்டியில் ஒரு 3 மணி நேரம் வரை இருக்கும். ஒரு வேளை செயலி லைசென்ஸ்கள் அந்த முகவரிக்கு அனுப்பப்பட்டால் நீங்கள் அங்கெ போய் படித்துக் கொள்ளலாம். இந்த சேவையை நான் சில காலமாக பயன்படுத்தி குப்பைகளைக் குறைத்திருக்கிறேன். ஒரு எச்சரிக்கை, இங்கு உருவாகும் அஞ்சல் பெட்டிகளுக்கு 'கடவுச் சொல்' இல்லாததால் நீங்கல் எந்த அஞ்சல் பெட்டியை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

தலைப்புக்கும் இந்தப் பதிவுக்கும் என்னடா தொடர்பு என்று ஒரு வேளை நீங்கள் குழம்பினால், அது 'Be anyone' என்ற மெய்லினேட்டரின் தலைப்பு வாசகத்தின் மொழிபெயர்ப்பு முயற்சி. ஹி.. ஹி..

பி.கு:
மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ் எழுத்துரு பிழை நீக்க கள்ள ஓட்டுப் போட விரும்பும் சகலமானவருக்கும்!

இந்த மெய்லினேட்டர் சேவையை பயன்படுத்தி நீங்கள் கணக்கற்ற கள்ள ஒட்டுக்களைப் போடலாம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி!

2 comments:

நாலாவது கண் said...

அதிருக்கட்டும், சுதர்சன்! நீங்கள் எத்தனை ஒட்டு போட்டீர்கள்! உள்ளூரில் கள்ள ஓட்டு பற்றி கற்றுக் கொடுத்ததும் நமக்கு எங்கே போனாலும் ஓட்டு என்றதும் இது தவிர்க்க முடியாமல் ஞாபகம் வந்துவிடுகிறதுதானே!

mailinator பற்றிய தகவலுக்கு நன்றி! இதுவரை எமாந்து கொண்டிருந்தேன். இனி ஏமாற்றப் பார்க்கிறேன்.

- சந்திரன்

வானம்பாடி said...

நன்றி! இது வரை 3 வோட்டு தான். நேரம் கிடைக்கும்போது போட்டுத் தாக்கலாம் என்று நினைத்திருக்கிறேன்! கள்ள ஒட்டானாலும் நல்ல விஷயத்துக்கான வோட்டல்லவா?