Thursday, November 09, 2006

ஈ-பேப்பருங்கோ ஈ-பேப்பர்

தமிழகத்தின் முக்கிய தமிழ் மற்றும் ஆங்கில தினசரிகள் அத்தனையும் ஈ-பேப்பர் வடிவில் கிடைப்பது கொஞ்சம் பெருமையாகத்தான் இருக்கிறது.

தமிழகத்தின் 3 முக்கிய ஆங்கில தினசரிகளும் ஈ-பேப்பர் வடிவில் கிடைக்கின்றன

ஹிந்து - 90 நாட்களுக்கு இலவசம், அப்புறம் எவ்வளவு காசென்று தெரியவில்லை. இப்போதைக்கு 90 நாட்களுக்குப் பின்னும் இலவசமாகவே ஆட்டைக்கு சேர்த்துக் கொள்கிறார்கள்.
இந்தியன் எக்ஸ்ப்ரஸ்
டெக்கான் க்ரோனிகிள்

தமிழ்

தினமலர்
தினகரன்
தமிழ்முரசு

தினத்தந்தியும் தினமணியும் இன்னும் களத்தில் இறங்கவில்லை போல.

இந்தியாவின் பல இ-பேப்பர்கள் ப்ரெஸ்ஸ்மார்ட் என்ற இந்திய நிறுவனத்தின் நுட்பத்தையெ பயன்படுத்துகின்றன. ப்ரெஸ்ஸ்மார்ட்டின் தளத்தில் அவர்களின் இந்திய மற்றும் பன்னாட்டு வாடிக்கையாளர்களின் விவரங்களையும் கொடுத்திருக்கிறார்கள். சத்தியப்பாதை, E A Water என்று கேள்வியேபடாதவற்றிற்கும் இ-பேப்பர் இருக்கிறது. இந்தியாவில் இத்தனை ஈ-பேப்பர்களா என்று ஆச்சரியமாக இருக்கிறது.




,
,


Wednesday, May 10, 2006

தினமலரின் தேர்தல் முடிவுகள்

தினமலரின் கடைசி செய்திகளில் கண்டெடுத்த முத்து:

சென்னை: மேற்கு வங்கத்தில் 209 தொகுதிகளில் இடதுசாரி அணியும் 40 தொகுதிகளில் திரிணமுல் காங்கிரசும் 35 தொகுதிகளில் மற்றவர்களும் முன்னிலையில் உள்ளனர். கேரளாவில் 88 தொகுதிகளில் இடதுசாரி அணியும் 51 தொகுதிகளில் காங்கிரஸ் அணியும் அசாமில் 26 தொகுதிகளில் காங்கிரசும் 15 தொகுதிகளில் அசமாகண பரிஷத்தும் 21 தொகுதிகளில் மற்றவர்களும் முன்னிலையில் உள்ளனர்.


இதுல தமிழ் நாடு எங்கப்பா? திடீரென தினமலர் தேசிய (மட்டும்) மலராகிவிட்டதே? ;-)

Update:
இப்போது தினமலருக்கு தமிழ்நாட்டிலும் வாக்குகள் எண்ணப்படுவது நினைவுக்கு வந்து விட்டது..

இப்போதைய 'கடைசி செய்திகள்'

ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா வெற்றி
விருத்தாசலத்தில் விஜயகாந்த் வெற்றி
அ.தி.மு.க.,வுக்கும் தி.மு.க.,வுக்கும் 23 இடங்கள் வித்தியாசம்
போனால் போகிறதென்று இது..

சேப்பாக்கத்தில் கருணாநிதி வெற்றி



,
,

,

Sunday, February 26, 2006

சன் குழுமத்தின் அடுத்த அதிரடி

தினகரன் நாளிதழை வாங்கிய சன் குழுமம் தற்போது அதை மெருகேற்றி அதன் விலையை 1 ரூபாயாக குறைத்துள்ளது. வலையில் ஈ-பேப்பர் வடிவத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வடிவமைப்பை சற்றே மாற்றி கொஞ்சம் வண்ண மசாலா தூவியிருக்கிறார்கள். செய்திகளின் சார்பில் பெரிய மாற்றமிருப்பதாகத் தெரியவில்லை.



,
,
,

Sunday, January 08, 2006

விளம்பர மாஃபியா

பல விதமான ப்ரக்ருதிகளிடம் சிக்கிக் கொண்டு இந்த மரங்கள் படும் பாடு சொல்லி மாளாது. புயல், வெள்ளம், சாலை அமைப்பது, அணை கட்டுவது என்று பல விதமான வளர்ச்சிப் பணிகள், கொள்ளையர்கள், மரக்கடத்தல்காரர்கள், வெட்டி சாலையில் போட்டு போராட்டம் என்பவர்கள் என்று நீண்டு கொண்டே போகும் இந்த வரிசையில் தற்போது சேர்ந்திருப்பவர்கள், நகரங்களில் பெரிய விளம்பரப் பலகைகளை வைக்கும் விளம்பர நிறுவனங்கள்.

முன்னொரு காலத்தில் 'கார்டன் சிட்டி' என்று அழைக்கப்பட்ட மரங்கள் நிரம்பிய பெங்களூர் நகருக்கு தான் இந்த நிலைமை. விளம்பரங்களை மறைக்கும் மரங்களை வெட்டி வீழ்த்தக் கிளம்பியிருக்கிறார்கள் பெங்களுர் விளம்பர மாஃபியாக்கள். மாநகராட்சியிடம் எந்த அனுமதியும் பேறாமல் தாங்களாகவே இந்த பொதுச்சேவையை நடத்துகிறார்கள். (தள்ள வேண்டியது தள்ளப்பட்டால் மாநகராட்சியிடம் அனுமதி பெறுவதி ஒன்றும் பெரிய விஷயமில்லைதான்). இவர்கள் மீது நீதிமன்றமே நேரடியாகத் தலையிட்டு கடுமையான நடவடிக்கை எடுத்தால்தான் உண்டு.

இது தொடர்பான ஆங்கிலப் பதிவொன்றின் சுட்டி.
இதில் மிகத் தெளிவாக படங்களுடன் எங்கே மரங்கள் வெட்டப்பட்டன என விளக்கியிருக்கிறார் அந்தப் பதிவர்.


| | |