Yahoo!, HP, Oracle போன்ற, சென்னையை இதுவரை கண்டுகொள்ளாமல் இருந்த பல பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள் டிசம்பர், ஜனவரி மாதங்களில் சென்னையில் கிளை பரப்ப இருக்கின்றன. 'சத்யம்' இந்தியாவிலேயே பெரிய கிளையை சென்னையில் தொடங்க இருக்கிறது. 'இன்போசிஸ்' சென்னையில் அதன் ஊழியர் எண்ணிக்கையை 25,000மாக விரிவுபடுத்துகிறது. தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப செயலர் விவேக் அரி நாராயணன் சொல்வது உண்மையானால் ஒவ்வொரு இரண்டாவது நாளும் சென்னையில் ஒரு தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனம் தொடங்கப்படுகின்றது.
கோயம்புத்தூரும் இத்துறையில் நன்றாக வளர்கிறது. TCS தனது கோயம்புத்தூர் கிளையை விரிவுபடுத்தப் போகும் வேளையில் விப்ரோ, இன்போசிஸ் போன்ற நிறுவனங்கள் அங்கு கால் பதிக்கப் போகின்றன. திருச்சியையும் அரசு விளம்பரப்படுத்துகிறது.
ஜவுளித் துறையில் உலகளாவிய 'கோட்டா' முறை முடிவடைவதால் திருப்பூரும், கரூரும் ஜவுளித்துறையில் மாபெரும் வளர்ச்சி காணும் வாய்ப்பு உள்ளது. இத்துறையின் வேலை வாய்ப்பு தகவல் தொழில்நுட்பத் துறையை விட இரு மடங்காக வளரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வாகன உதிரிப் பாகங்கள் தயாரிப்பிலும் சென்னை சக்கை போடு போடுகின்றது. இந்த வளர்ச்சி எல்லாம் தமிழகத்தின் அடிப்படைக் கட்டமைப்பு நன்றாக இருப்பதாலா அல்லது மற்ற மா நிலங்களில் நிலைமை இதை விட மோசமாக இருப்பதாலா?
2 comments:
Is it Oracle comming to Chennai? From where did you get the source?
'Economic Times' நாளேட்டில,. எந்த தேதி என்று நினைவில்லை. சென்னை அண்ணா சாலையில், சின்ன மலை அருகே கட்டப்படும் ஒரு புதிய பல மாடி கட்டிடம், ஆரக்கிளுக்காக என்று கேள்வி.
Post a Comment