Wednesday, May 10, 2006

தினமலரின் தேர்தல் முடிவுகள்

தினமலரின் கடைசி செய்திகளில் கண்டெடுத்த முத்து:

சென்னை: மேற்கு வங்கத்தில் 209 தொகுதிகளில் இடதுசாரி அணியும் 40 தொகுதிகளில் திரிணமுல் காங்கிரசும் 35 தொகுதிகளில் மற்றவர்களும் முன்னிலையில் உள்ளனர். கேரளாவில் 88 தொகுதிகளில் இடதுசாரி அணியும் 51 தொகுதிகளில் காங்கிரஸ் அணியும் அசாமில் 26 தொகுதிகளில் காங்கிரசும் 15 தொகுதிகளில் அசமாகண பரிஷத்தும் 21 தொகுதிகளில் மற்றவர்களும் முன்னிலையில் உள்ளனர்.


இதுல தமிழ் நாடு எங்கப்பா? திடீரென தினமலர் தேசிய (மட்டும்) மலராகிவிட்டதே? ;-)

Update:
இப்போது தினமலருக்கு தமிழ்நாட்டிலும் வாக்குகள் எண்ணப்படுவது நினைவுக்கு வந்து விட்டது..

இப்போதைய 'கடைசி செய்திகள்'

ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா வெற்றி
விருத்தாசலத்தில் விஜயகாந்த் வெற்றி
அ.தி.மு.க.,வுக்கும் தி.மு.க.,வுக்கும் 23 இடங்கள் வித்தியாசம்
போனால் போகிறதென்று இது..

சேப்பாக்கத்தில் கருணாநிதி வெற்றி



,
,

,

17 comments:

Anonymous said...

Perhaps they are waiting for the Mayavarathan's comments

Muthu said...

அவங்க தேசியவியாதிங்களாச்சே..

Anonymous said...

மாயவரத்தான் ரமேஷ்குமாரையும் லண்டன் ஜெயக்குமாரையும் கருத்து கேளுங்க!!!

Muthu said...

ஜெயா டிவி பாருங்கள் இன்னும் சுவாரசியமாய் இருக்கும். :-D :-D

Anonymous said...

vachomula appppppuuuuu

Desiya malar enna inni verum vara malam thaan

Darren said...

நடுநிலை பத்திரிக்கை??????????

தமாசு தமாசு..........

பிரதீப் said...

ஜெயா டிவிதான் நான் இன்னைக்குப் பாத்தேனே...
காலையில 10 மணி வரைக்கும் அவங்க அடிச்ச கூத்து என்ன... அடடா... ரபி பெர்னார்டு மைத்ரேயனைப் பார்த்து "அப்போ எக்சிட் போல்?" என்று கேட்க அவர் "அவர்கள் எல்லாம் எக்சிட் ஆக வேண்டும்" என்று சொல்ல... பரமானந்தம்.

எனக்கு என் டி டி வியும் சி என் என்னும் ஜெ. வீட்டு முன்னாடி எடுத்த படம் எல்லாம் சன் டிவி செட்டப்போன்னு ஒரே டவுட்டு.

ஜெயாடிவியில் ரொம்ப நேரம் அதிமுக கூட்டணி தமிழகம் புதுவையில் அப்படியே போட்டுத் தாக்கியதாகச் சொன்னார்கள்.

ஆனால் கடைசியில் சென்னையில் அதிமுக அபார வெற்றி, ஜெ. பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி, கலைஞரும் கூட்டணிக் கட்சியினரும் ஜஸ்ட் லைக் தட் கொஞ்சமே கொஞ்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி என்றெல்லாம் அவர்கள் கண்களைத் துடைத்துக் கொண்டே சொல்ல வேண்டியதாயிற்று.

இரா.சுகுமாரன் said...

தினமலருக்கு ஒரு கோவிந்தா?
அதன் கருத்துக் கணிப்புக்கு ஒருகோவிந்தா?
அவங்க தேர்தல் அறிவிப்பும் ஒரு கோவிந்தா ஆகிப்போச்சு
கோவிந்தா! கோவிந்தா!!

manasu said...

நாளை தினமலரில் தலைப்பு செய்தி பாருங்கள்.

"கூட்டணி ஆட்சிக்கு தள்ளப்பட்டது திமுக - அதிமுக விற்கு விடுதலை."

Muthu said...

விஜயகாந்த் வாங்கிய ஓட்டும் ஒரு சீட்டும் பலபேர் மானத்தை காத்துள்ளது என்றால் மிகையாகாது


பி.கு

மேலே பிரதீப் கமெண்ட்ஸ் சூப்பர்

aathirai said...

"Izhupari- thimuka aatchi amaipathil izhupari"

endru title poduvargal endru ninaikiren.

nettru kuda jaya jeyippar endru ezhudinargal.

வானம்பாடி said...

பின்னூட்டியவர்களுக்கு நன்றி.

ஆதிரை,
நேற்று எழுதியதை விடுங்கள், இன்று கூட டீ-கடை பெஞ்சு பகுதியில் புதிய 11 சத ஒட்டுக்கள் அதிமுகவிற்கே என்று ஒரு கண்டுபிடிப்பை வெளியிட்டிருந்தார்களே...

வானம்பாடி said...

முத்து, சரியாக சொல்லியிருக்கிறீர்கள் :)

Anonymous said...

நாளை தின மலர் தலைப்பு செய்திகள்
1) தி.மு.க கூட்டணிக்குள் பெரும் குழப்பம்,
2) அமைச்சரவையில் இடம் கேட்டு காங்கிரஸ், பா.ம.க போர் கொடி நெருக்கடியில் தி.மு.க
என்று இருக்கும் பாருங்கள்..

அன்புடன்
சரவணன்.இரா.

பிரதீப் said...

நல்ல வேளை இத்தோட நிறுத்தினீங்க, அவங்க பாட்டுக்கு அடுத்து
1. ஆட்சி அமைப்பதில் திமுக காங்கிரஸ் இடையே அடிதடி
2. திமுகவின் ஏதேச்சாதிகாரத்தை எதிர்த்து ஜெ.யிடம் காங்கிரஸ் கூட்டணி
3. பாமகவும் சேர முடிவு
4. ஜெ. அடுத்த முதல்வர்

இப்படியெல்லாம் போகாம இருந்தாச் சரி.

முத்து,
நன்றி. இதே ரபி சன் டிவியில நேருக்கு நேர் நடத்தியபோது சுப்பிரமணிய சாமியையே வறுத்தெடுத்தது என்னமோ நினைவுக்கு வந்தது. அந்தக் கடுப்பில எழுதினேன். ஒரு கூச்ச நாச்சம் இல்லாம ஜெ. ஆட்சிக்கே வந்து விட்டது போல் நாடகம் ஆடியதுதான் என்னால் தாங்க முடியவில்லை.

Anonymous said...

சரவணன்.இரா. thaviva,

Super

Anonymous said...

ullachti therthal patri onrum solvathaga illayo?Neram Illaya allathu arasiyalum..pathirikkayum pothum enragivittatha.


Sevai thodarattum