Sunday, February 26, 2006

சன் குழுமத்தின் அடுத்த அதிரடி

தினகரன் நாளிதழை வாங்கிய சன் குழுமம் தற்போது அதை மெருகேற்றி அதன் விலையை 1 ரூபாயாக குறைத்துள்ளது. வலையில் ஈ-பேப்பர் வடிவத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வடிவமைப்பை சற்றே மாற்றி கொஞ்சம் வண்ண மசாலா தூவியிருக்கிறார்கள். செய்திகளின் சார்பில் பெரிய மாற்றமிருப்பதாகத் தெரியவில்லை.



,
,
,

8 comments:

Narain Rajagopalan said...

//செய்திகளின் சார்பில் பெரிய மாற்றமிருப்பதாகத் தெரியவில்லை. //

ஆனாலும், உங்களுக்கு அபாரமான காமெடி சென்ஸ் ;)

சந்திப்பு said...

தமிழ் பத்திரிகை உலகில் இன்னொரு குப்பைதான் தினகரன் நாளிதழ். ஏற்கனவே சன்குழுமம் தமிழ்முரசு என்ற பெயரில் தமிழ் பத்திரிகை உலகத்தை சீரழித்து வருகிறது. மாலையில் சீரழித்ததுபோதாது என்று இப்போது காலையிலேயே சீரழிக்கத் துவங்கி விட்டனர். மேலும் தேர்தலை மனதில் கொண்டு பத்திகையில் திமுக சார்ந்த செய்திகளை முன்னெடுத்துச் செல்லும் தந்திரமே தினகரனின் புதிய வடிவம்.

Voice on Wings said...

e-paperஐப் பார்வையிட்டேன். Textக்கு பதிலாக scan செய்த படங்களை வைத்தே முழுவதுமாக நிரப்பியிருக்கிறார்கள் போலிருக்கிறதே? நல்ல நுட்பம்தான் :)

ஜோ/Joe said...

தினகரன் ஒன்றும் சுத்தம் இல்லையென்றாலும் ,இது 'கோயபல்ஸ்' தினமலரின் ஆதிக்கத்தை கொஞ்சம் குறைத்தாலும் ,அது நல்லது தான்.

manasu said...

ஜோ சொல்வது சரியே.

தினகரனும்,தமிழ்முரசும்,சன் டிவி யும் சுத்தம் இல்லை தான்.

டாக்டர் நமது எம்ஜியார் (நடுநிலை நாளேடு) ஜெயா டிவி யும் எந்த அளவுக்கு சுத்தம்??????????

வானம்பாடி said...

நாராயணா:
நன்றி. ;-)

VoW:
இதே நுட்பத்தை தான் தினமலரும் தமிழ்முரசும் பயன்படுத்துகிறார்கள்.

சந்திப்பு:
தினகரனை தி.மு.க கட்சி நாளேடு என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை இந்த மாறுதல்கள் தினகரனை மக்களிடம் பரவலாக சேர்க்கலாம். ஆனாலும் அது தி.மு.க சார்பு நாளேடு என்ற எண்ணம் மக்களிடம் இருந்து போகப் போவதில்லை. ஆனால் முழு நடுநிலை நாளெடு என்று பச்சை பொய் புளுகிக் கொண்டு திரியும் தினமலருக்கு ஒரு ஜனரஞ்சக மாற்று தேவைதான். அதிமுகவுக்கு நமது எம்.ஜி.ஆர் & தினமலர். திமுகவுக்கு முரசொலி & தினகரன். கணக்கு சரிதானே..
மற்றபடி தமிழ்முரசு புதிதாக என்னத்தை சீரழித்தது என்று நீங்கள் கூறுகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை.

ஜோ:
உங்கள் கருத்தோடு முழுமையாக உடன்படுகிறேன்.

Ram.K said...

ரெண்டு ரூபாய் தமிழ் முரசுக்கு இலவசம் கொடுக்கிறார்கள். இதுக்கு என்ன வியாபார யுக்தி செய்வார்களோ?
விலை ஒரு ரூபாய். அப்புறம் என்ன செய்ய முடியும்?

நாமக்கல் சிபி said...

////செய்திகளின் சார்பில் பெரிய மாற்றமிருப்பதாகத் தெரியவில்லை. //


செய்திகளா...!?

இன்னிக்கு வரைக்கும் காசு கொடுத்து ஜனங்க தி.மு.க வோட விளம்பர நோட்டீஸை வாங்குறாங்கன்னல்ல நெனச்சேன்!