Sunday, January 08, 2006

விளம்பர மாஃபியா

பல விதமான ப்ரக்ருதிகளிடம் சிக்கிக் கொண்டு இந்த மரங்கள் படும் பாடு சொல்லி மாளாது. புயல், வெள்ளம், சாலை அமைப்பது, அணை கட்டுவது என்று பல விதமான வளர்ச்சிப் பணிகள், கொள்ளையர்கள், மரக்கடத்தல்காரர்கள், வெட்டி சாலையில் போட்டு போராட்டம் என்பவர்கள் என்று நீண்டு கொண்டே போகும் இந்த வரிசையில் தற்போது சேர்ந்திருப்பவர்கள், நகரங்களில் பெரிய விளம்பரப் பலகைகளை வைக்கும் விளம்பர நிறுவனங்கள்.

முன்னொரு காலத்தில் 'கார்டன் சிட்டி' என்று அழைக்கப்பட்ட மரங்கள் நிரம்பிய பெங்களூர் நகருக்கு தான் இந்த நிலைமை. விளம்பரங்களை மறைக்கும் மரங்களை வெட்டி வீழ்த்தக் கிளம்பியிருக்கிறார்கள் பெங்களுர் விளம்பர மாஃபியாக்கள். மாநகராட்சியிடம் எந்த அனுமதியும் பேறாமல் தாங்களாகவே இந்த பொதுச்சேவையை நடத்துகிறார்கள். (தள்ள வேண்டியது தள்ளப்பட்டால் மாநகராட்சியிடம் அனுமதி பெறுவதி ஒன்றும் பெரிய விஷயமில்லைதான்). இவர்கள் மீது நீதிமன்றமே நேரடியாகத் தலையிட்டு கடுமையான நடவடிக்கை எடுத்தால்தான் உண்டு.

இது தொடர்பான ஆங்கிலப் பதிவொன்றின் சுட்டி.
இதில் மிகத் தெளிவாக படங்களுடன் எங்கே மரங்கள் வெட்டப்பட்டன என விளக்கியிருக்கிறார் அந்தப் பதிவர்.


| | |

5 comments:

Anonymous said...

Good article sudharsan. Keep it up.

Unknown said...

சுதர்சன்,
உங்கள் பதிவுக்கு சம்பந்தம் இல்லாத பின்னூட்டம்..இருந்தாலும் தமிழ் நண்பர்களுக்கெல்லாம் சொல்லிக் கொண்டு வருகிறேன்.

விவசாயிகளின் நன்றித் திருநாளான பொங்கல் நாளில்..
உங்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகள்.
உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மகிழ்ச்சியும்,அன்பும் மற்றும் எல்லா வளங்களும் பொங்கல் போல் என்றும்

பொங்கட்டும்.
அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா.

வானம்பாடி said...

பலூன் மாமா,

உங்களுக்கும் என் பொங்கல் வாழ்த்துகள்! பொங்கலை சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தமிழர் திருநாளாக கொண்டாட வைக்கும் முயற்சிக்கு என் பாராட்டுகள்!

Ram.K said...

நல்ல பதிவு.

ஏன் நிறுத்தி விட்டீர்கள்.
நீண்ட இடைவெளி?

வானம்பாடி said...

பச்சோந்தி, நன்றி. இடுகைகளுக்கிடையேயான இடைவெளி சற்று அதிகமாக இருப்பது உண்மைதான். விரைவில் அதிகம் எழுதுவேன் என எதிர்பார்க்கிறேன்.