Thursday, February 03, 2005

ஜோயல் ஆன் சாப்ட்வேர் (Joel on Software)

ஜோயல் ஸ்போல்ஸ்கி என்பவர் மென்பொருள் பொறியியல் பற்றி பல நல்ல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவருடைய இணைய தளம் Joelonsoftware.com.
இந்த கட்டுரைகள் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உங்களுக்கு விருப்பமான கட்டுரைகளை நீங்கள் உங்கள் மொழியில் மொழிபெயர்க்க விரும்பினாலும் அவரிடம் தெரிவிக்கலாம். நான் தமிழில் மொழி பெயர்க்க விருப்பம் தெரிவித்து சிலவற்றை மொழி பெயர்த்தேன், சிலவற்றைப் பிழை திருத்தம் செய்தேன். இதைச் செய்யும் போது தான் தமிழில் எவ்வளவு கலைச் சொற்கள் இன்னமும் தேவை என உணர்ந்தேன். ஆங்கிலத்தில் மிகச் சுலபமாக புதிய சொற்களை உருவாக்கி விடுகிறார்கள், அதற்கு சிறந்த உதாரணம் 'Googling'. ஆனால் தமிழில் அப்படி முடிவதில்லை.
இப்பொழுது அந்த தளத்தின் தமிழ் வடிவம் இயங்கி வருகிறது. நேரமின்மை மற்றும் வேலைப்பளுவால் என்னால் தொடர்ந்து மொழிபெயர்ப்பில் ஈடுபடமுடியவில்லை. நேரமும் விருப்பமும் இருப்பவர்கள் இப்பணியில் ஈடுபடலாம்.

6 comments:

அன்பு said...

நல்ல முயற்சி, பாராட்டுக்கள். நீங்கள் சொல்வது உண்மை. நான் நேற்று என்னுடைய பதிவுக்கு, "10 Tech Trends" என்பதைத் தமிழ்படுத்த மிகுந்த சிரமப்பட்டேன். இறுதியில் எங்கெங்கோ தேடி போக்குகள் என்று சொல்லிவைத்தேன். நான் இதுவிஷ்யமாக நண்பர்களிடம் பேசும்போதும் அவர்களுக்கும் தெரியவில்லை, சிரித்துவிட்டு போய்விடுகிறார்கள். இதே நிலை நீடித்தால் வருங்காலத்தில் நாம் இருவரும் கதை பேசுவதற்காக மட்டுமே தமிழ் பயன்படுத்துவோம். அந்த நிலை வரும்போது தமிழின் நிலை?

Boston Bala said...

முன்பே படித்திருக்கிறேன். எளிமையான ஓட்டம்; சுலபமாகப் புரிகிற நடை.

வானம்பாடி said...

நீங்கள் எதைப் பற்றி சொல்கிறீர்கள் பாலா? ஸ்போல்ஸ்கியின் கட்டுரைகளைப் பற்றியா அல்லது மொழிபெயர்ப்பைப் பற்றியா? எதுவாயினும் நன்றி!

மு. மயூரன் said...

நல்ல முயற்சி.
வாழ்த்துக்கள்.
தயவு செய்து உங்கள் தளத்தை யுனிகோடுக்கு மாற்றுங்கள்.
பல வழிகளில் அது பயனுள்ளதாய் அமையும்.

சுந்தரவடிவேல் said...

//googling//செல்வராஜின் வலைப்பதிவில் "கூகுளடித்தல்" என்று படித்தேன். இதையே பயன்படுத்துகிறேன்.

இளங்கோ-டிசே said...

சுதர்சன், நல்ல விடயம்.
நீங்களும் நேரங்கிடைக்கும்போது மொழிபெயர்த்து பதிவிலிடுங்கள். சரியான தமிழ்ச்சொற்கள் தெரியாதவிடத்தில் ஆங்கிலத்திலேயே எழுதினீர்கள் என்றால், அந்த சொல்லின் தமிழ்ச்சொல் தெரிந்த நண்பர்கள் பின்னூட்டஙளில் எழுதக்கூடும்.
....
பாண்டிச்சேரியிலும் படித்திருக்கிறீர்கள். பிரெஞ்சும் நல்லாத் தெரியும் போல :-).